Saturday, September 02, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 10

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

**************************



1. தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த் தென்றல் என்னைத் தொடலாம்

2. கலையாத மோகனச் சுவை நான் ...

3. மகிழ்வார், சுகம் பெறுவார், அதிசயம் காண்பார்

4. புன்னகை வீசி ஆறுதல் கூற அருகில் ....

5. இச்சைக் கிளியாய் மாறுவேன், என்றும் உன்னை நாடுவேன்

6. அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்

7. மை வடித்த கண்ணில் பெண் பொய் வடித்ததென்ன

8. மனக்கோயில் வாழ வந்த தெய்வீகப் பெண் என்பதோ

9. திக்கி திக்கிப் பேசுவது குயில் போலே

10. பாடும் உள்ளம் துள்ளத் துள்ள பாடல் ஒன்று ...

11. விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள் புரியாதோ ...

12. முடியும்போது தொடங்கும், நீ தொடங்கும்போது முடியும்


*******************************

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

25 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

CT,
Your 'pallavi' is for saraNam no. 12, not 10 :)

ஜெயஸ்ரீ said...

2. ஒரு நாள் போதுமா - திருவிளையாடல்

ஜெயஸ்ரீ said...

9. கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - பஞ்சவர்ணக்கிளி

ஜெயஸ்ரீ said...

10. ராக தீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை

பத்மா அர்விந்த் said...

2. பாட்டும் நானே
5. கண்கள் இரண்டும் என்றும்
6.ஆடாமல் ஆடுகிறேன்
10.தகிட ததுமி
அத்தை மடி மெத்தையடி

dondu(#11168674346665545885) said...

"மகிழ்வார், சுகம் பெறுவார், அதிசயம் காண்பார்"

பாடல்: ஆசையே அலைபோலே

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

2. கலையாத மோகனச் சுவை நான் ...
ஒரு நால் (!) போதுமா. படம் திருவிளையாடல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"4. புன்னகை வீசி ஆறுதல் கூற அருகில் ...."

அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லதா said...

2. ஒரு நாள் போதுமா (திருவிளையாடல்)

3. ஆசையே அலைபோலே

4. அமுதைப் பொழியும் நிலவே

5. நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்

6. ஆண்டவனைத் தேடுகின்றேன் வா வா (ஆயிரத்தில் ஒருவன்)

7. நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என்று காதல் தேவதை சொன்னாள்

8. பாடினாள் ஒரு பாட்டு பால்நிலாவினில் நேற்று

dondu(#11168674346665545885) said...

9. திக்கி திக்கிப் பேசுவது குயில் போலே

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்... படம் பஞ்சவர்ணக்கிளி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அபுல் கலாம் ஆசாத் said...

2. ஒருநாள் போதுமா (திருவிளையாடல்)

4. அமுதைப் பொழியும் நிலவே (தங்கமலை ரகசியம்)

6. எல்லோரும் நலம்வாழ (எங்க மாமா)

7. நாம் ஒருவரை ஒருவர் (ராமன் தேடிய சீதை)

அன்புடன்
ஆசாத்

மதுமிதா said...

4.அமுதே பொழியும் நிலவே
(தங்க மலை ரகசியம்)

6.ஆடாமல் ஆடுகிறேன்
(ஆயிரத்தில் ஒருவன்)

7.நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவதை சொன்னாள்.

9.கண்ணன் வருவான் கதைசொல்லுவான்

enRenRum-anbudan.BALA said...

*******************
ஜெயஸ்ரீ, ராகவன், லதா, பத்மா,
போட்டியில் கலந்து கொண்டமைக்கு நன்றி.

பத்மா,
நீங்கள் கூறிய 2, 5 & 10 தவறு :(

லதா,
6-வதின் பல்லவி "ஆடாமல் ஆடுகிறேன், பாடாமல்" ! ஆனாலும், கலக்கீட்டிங்க, நீங்க, I mean, your answers for 5,7 and 8 :)

டோண்டு,
கூறிய நான்கும் சரி ! அதென்ன, "ஒரு நால் போதுமா" ????

ஜெயஸ்ரீ,
கூறிய மூன்றும் சரி !

இன்னும் கண்டுபிடிக்கப்படாத பாடல்கள், 1, 11 & 12 !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

பத்மா அர்விந்த் said...

பாலா
நான் நினைத்ததென்ன்னவோ ஒரு நாள் போதுமா எழுதியதுதான் தவறு. படம் சரியானது எனவே பாதி மதிப்பெண்ணாவது வேண்டும்:)

பத்மா அர்விந்த் said...

பாலா
நான் நினைத்ததென்ன்னவோ ஒரு நாள் போதுமா எழுதியதுதான் தவறு. படம் சரியானது எனவே பாதி மதிப்பெண்ணாவது வேண்டும்:)

enRenRum-anbudan.BALA said...

Azad, Madhumitha,
Will come back later to correct your Answer Paper :))))

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

*************************

பத்மா,
//பாலா
நான் நினைத்ததென்ன்னவோ ஒரு நாள் போதுமா எழுதியதுதான் தவறு. படம் சரியானது எனவே பாதி மதிப்பெண்ணாவது வேண்டும்:)
//

OK, OK :) நீங்கள் 2 பல்லவிகள் கண்டுபிடித்ததாக ஏற்றுக் கொண்டு, 50 மதிப்பெண்கள் வழங்கி, நீங்கள் பாஸாகி விட்டதாக அறிவிக்கிறேன்.

அன்புடன் ஆசாத்,
6-வது பல்லவி தவறு :( அதனால், நீங்கள் 75/100, OK :)

மதுமிதா,
கூறிய நான்கும் சரி, எனவே, நீங்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் :)

டோண்டு,
You also get 100/100, This is great as you are not a regular contestant of பல்லவியும் சரணமும் :)

ஜெயஸ்ரீ,
உங்களுக்கு 75/100, ஏனெனில், மினிமம் நான்கிற்கு பதில் கூற வேண்டும் :)

லதா,
ஒரு சின்ன தவறு செய்திருந்தாலும், I give you 100/100 :)

என்றென்றும் அன்புடன்
பாலா
********************

லதா said...

1. தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த் ***திங்கள்*** என்னைத் தொடலாம்

பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் ( 1000த்தில் ஒருவன் )

Chandravathanaa said...

6) ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
படம் : ஆயிரத்தில் ஒருவன்
பாடியவர் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
வரிகள்: வாலி

Chandravathanaa said...

2) ஒரு நாள் போதுமா
இன்றொருநாள் போதுமா
நான் பாட இன்றொருநாள் போதுமா

படம் - திருவிளையாடல்
பாடியவர் - பாலமுரளி கிருஸ்ணா
இசை - கே.வி.மகாதேவன்.

3 )ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

4) அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேோ
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்

பாடடியவர் - சுசீலா
படம் - தங்கமலை ரகசியம்
இசை- T.G.லிங்கப்பா


6) ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

படம் : ஆயிரத்தில் ஒருவன்
குரல் : பி.சுசீலா

7) நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவதை சொன்னாள்
என் வலது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

படம் - சங்கே முழங்கு
பாடியவர்கள் - T.M.S+L.R.ஈஸ்வ ரி

9) கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
படம்- பஞ்சவர்ணக்கிளி

12) தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சலங்கை ஒலி படத்தில் S.P.பாலசுப்ரமணியம்

சீமாச்சு.. said...

//11. விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள் புரியாதோ//

இது பாடல் "வசந்தம் பாடி வர.. வைகை ஓடி வர.."
படம்: இரயில் பயணங்களில

அன்புடன்,
சீமாச்சு

enRenRum-anbudan.BALA said...

லதா,
//1. தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த் ***திங்கள்*** என்னைத் தொடலாம்
//
என்ன, வாத்தி கிட்டயே தப்பு கண்டுபிடிக்கறீங்க ;-) 'Typo' தவறை சுட்டியதற்கு நன்றி. கூறிய பல்லவி மிகச் சரி :)

சந்திரவதனா,
பழைய பாடல்களில் நீங்கள் புலி என்று மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள் :) நன்றி.
சீமாச்சு,
11. விடை சரி ! போட்டிக்கு, நீங்கள் கொஞ்சம் "Late Arrival"
CT,
Thanks !

எ.அ.பாலா
**********************

Thanjavurkaran said...

11. Vasantham padivara Vaigai odivara - Rail Payanangalil

enRenRum-anbudan.BALA said...

thanjavurkaran,

Very late for the show :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails